Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

10 நாளுக்கு ஒரு முறை…… 10,000 ரூபாய் வட்டி….. டெபாசிட் பண்ண வாங்க…. 60,00,000 மோசடி செய்த நபர்…!!

10 நாட்களுக்கு ஒரு முறை 10 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாகக் கூறி 60 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க மனு கொடுக்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்டத்தில் அதிக வட்டி கொடுப்பதாக கூறி 60 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த நபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.பி அலுவலகத்திற்கு சென்று மனு கொடுத்தனர். அந்தியூர் அடுத்திருக்கும் தவுட்டுபாளையத்தை சேர்ந்த பாரதி என்பவர் பவானி நகர கூட்டுறவு வங்கியில் பணி புரிவதாகவும் ஒரு லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால் 10 ஆயிரம் ரூபாயை 10 நாட்களுக்கு ஒரு முறை கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.

இதனை நம்பிய 20 பேர் 60 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்துள்ளனர் பணத்தை அவர்களிடம் இருந்து பெற்ற பாரதி போலியாக காசோலையை வழங்கி விட்டு தப்பிச் சென்றுள்ளார். பணம் செலுத்தியவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து ஈரோடு மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து தங்கதுரை நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர்.

Categories

Tech |