Categories
கிரிக்கெட் விளையாட்டு

“CSK வயதான அணி” வேற ஒன்னும் சொல்றதுக்கில்ல…. வெளிப்படையாக கூறிய முன்னாள் வீரர்…!!

சிஎஸ்கே அணிக்கு வயதாகிவிட்டது என்று நியூஸிலாந்து மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார்

இவ்வருடம் நடந்து வரும் ஐபிஎல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 போட்டிகளில் ஏழு தோல்விகளை அடைந்து பிளே ஆப் வாய்ப்பை இழந்து புள்ளி பட்டியலில் பின்தங்கியுள்ளது. இந்நிலையில் நியூஸிலாந்து மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ஸ்காட் சிஎஸ்கே அணி ஐபிஎல்-ல்  பின்தங்கி இருப்பதற்கான காரணத்தை கூறியுள்ளார். அவர் கூறுகையில் இது சொல்வதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

ஆனால் சொல்லித்தான் ஆக வேண்டும். தற்போதைய நிலவரப்படி நடப்பு சீசனில் சிஎஸ்கே அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியுள்ளனர். பத்திரிக்கையாளர் சந்திப்பில் கடந்த போட்டிக்கு பிறகு சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் கூறிய வார்த்தைகளை வைத்தே அதனை நாம் சொல்லிவிடலாம். சிஎஸ்கே அணியின் வாழ்நாள் முடிந்து விட்டதாக அவர் கூறியிருந்தார் கடந்த மூன்று வருடங்களாக அதையே அனைவரும் சொல்லி வருகிறோம்.

அது வயதான அணி. வயதாகிவிட்டதால் ஒரு கட்டத்தில் நிச்சயம் அந்த அணி வீழ்ச்சியை சந்திக்கும் என்பது ஏற்கனவே எதிர்பார்த்ததுதான். அது இந்த சீசனில் நடந்துள்ளது. பார்ம் அவுட் மற்றும் சீனியர் வீரர்கள் தான் வீழ்ச்சிக்கு காரணம். டூப்லெஸி மற்றும் தீபக் சாஹரை தவிர மற்ற அனைத்து வீரர்களும் சரியாக விளையாடாமல் சொதப்புகின்றனர். வேறு எதுவும் சொல்வதற்கு இல்லை” என்று கூறியுள்ளனர்.

Categories

Tech |