பிரபல இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் திடீர்மாரடைப்பு காரணமாக டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் திடீர் மாரடைப்பு காரணமாக டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்படுகிறது என சுமந்த் சி ராமன் உள்ளிட்ட மூத்த பத்திரிகையாளர்கள் ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளனர். அவர் விரைவில் குணமாக வேண்டி சமூகவலைதளங்களில் பலரும் வேண்டி பதிவிட்டுவருகிறார்கள்.