செல்போனை அதிக நேரம் பயன்படுத்துவதால் குழந்தைகளின் வாழ்க்கை பாதிக்கும் என குழந்தைகள் நல மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீடிக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுப்பது தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால், வீட்டில் உள்ள குழந்தைகள் செல்போனை பயன்படுத்துவது அதிகரித்து உள்ளது.
இதனோடு ஆன்லைன் வகுப்பும் இருப்பதால் அதனை பயன்படுத்தும் நேரம் அதிகரிக்கிறது. இது அவர்கள் வாழ்க்கையை பாதிக்கும் என்று குழந்தைகள் நல மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஒரே இடத்தில் உட்கார்வதால் உடல் பருமன் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவும், செல்போன்கள் மூளை வளர்ச்சியை பாதிக்கும் எனவும் கூறியுள்ளனர்.