அங்கு ஒரு கிராமமே நெடுஞ்சாலை கொள்ளையர்களாக மாறியுள்ளது. விலை உயர்ந்த பொருட்களுடன் நெடுஞ்சாலைகளில் வரும் வாகனங்களில் லாரிகள் மற்றும் கார்களில் சென்று மடக்கி கொள்ளை அடிப்பது தான் இவர்களின் ஸ்டைல். தமிழக ஆந்திர எல்லையான சித்தூரில் அரங்கேறிய செல்போன் கொள்ளை போன்ற சூளகிரி பகுதியிலும் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் நேற்று கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன.
இதில் ஈடுபட்டது மத்தியபிரதேச கும்பல் என்பதை உறுதி செய்து உள்ள கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸார் 9 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் முதலில் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள 7500 செல்போன்கள் கொள்ளை போனதாக தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் 14,500 செல்போன்கள் கொள்ளை போய் இருப்பது உறுதியாகி உள்ளது.
கொள்ளையர்கள் ஸ்ரீபெரும்புதூரில் பதுங்கி இருந்து நன்கு நோட்டமிட்டு கொலையை அரங்கேற்றி உள்ளனர். ஸ்ரீபெரும்புதூரிலிருந்து 3 லாரிகளில் பயணித்த கொள்ளையர்கள் சுமார் 250 கிலோ மீட்டர் தூரம் கண்டெய்னர் லாரியை பின்தொடர்ந்து சென்று உள்ளனர். சூளகிரி அருகே வனப்பகுதியில் கண்டெய்னர் லாரி மெதுவாக சென்றபோது பின்னால் வந்த இரண்டு லாரிகளில் இருந்து கொள்ளையர்கள் விடாமல் ஹாரன் அடுத்து உள்ளனர்.
மூன்றாவது லாரிகளில் இருந்த கொள்ளையர்கள் கண்டெய்னர் லாரியை முந்தி சென்று மடக்கி உள்ளனர். அவர்கள் அனைவரும் 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் என தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் மத்திய பிரதேச மாநிலம் தேவஸ் மாவட்டம் டான் கார்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அங்குள்ள கஞ்சேரி இன பழங்குடிகள் இப்படி நெடுஞ்சாலை கொள்ளையர்களாக மாறியதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
லாரிகள் மற்றும் கார்களில் பின்தொடர்ந்து நெடுஞ்சாலைகளில் வலம் வரும் வாகனங்களை மடக்கி கொள்ளையடிப்பது தான் இவர்களது ஸ்டைல். இவர்களுக்கு நேபாளம் மற்றும் பங்களாதேஷ் வரை தொடர்பு உள்ளது. அண்மையில் டான்கார்ட் கிராமத்தில் மத்தியபிரதேசம் மகாராஷ்டிரா மற்றும் ஆந்திர போலீசார் கூட்டுச் சோதனை நடத்தி நான்கு டிரக்குகள் நான்கு கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்துள்ளனர். அப்போது தப்பிய 9 பேர் தான் இப்போது சூளகிரி செல்போன் கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.