சீனாவுடன் மோதல் போக்கில் இருக்கும் தைவானுக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்து வருகிறது
கடந்த சில மாதங்களாக சீனாவிற்கும் தைவானுக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது. எந்த சூழலிலும் தைவான் மீது சீனா தாக்குதல் நடத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் தரையில் இருக்கும் இலக்குகளை வானிலிருந்து தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் மற்றும் பல ஆயுதங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய ரூபாய் 7,379 கோடி மதிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
தனது கூட்டாளியான தைவானுக்கு அமெரிக்கா எஸ்எல்ஏஎம்-ஈஆர், ஏஜிஎம்-84எச் ஏவுகணைகள் ஆறு, ஏவுகணைகளுடன் 11 எம்142 மொபைல் லைட் ராக்கெட் மற்றும் எம்.எஸ்-110 விமான உளவு கண்காணிப்பு கருவிகள் போன்றவற்றை வழங்குகிறது. இந்த ஏவுகணைகள் தற்போது தைவானில் நிலவி வரும் அச்சுறுத்தல்களுக்கு உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த ஏவுகணைகளில் எஸ்எல்ஏஎம்-ஈஆர் ஏவுகணை பகல் மட்டுமல்லாது இரவு நேரத்திலும் நகரும் இலக்கை துல்லியமாக தாக்கும் திறமை கொண்டது. இந்த விற்பனை அமெரிக்கா தைவான் நீரிணையின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவத்தை வழங்குகிறது என்பதை சுட்டிக் காட்டியுள்ளது. மேலும் அமெரிக்கா நமது நாட்டின் மொத்த பாதுகாப்பு திறன்களையும் வளப்படுத்துவதில் தீவிரமாக உதவி புரிகிறது என தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.