Categories
தேசிய செய்திகள்

அப்பாடா….இதான்டா 2020ல் இந்தியாவுக்கு கிடைச்ச ஹேப்பி நியூஸ்…!!

கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்தின் 3ஆம் கட்ட பரிசோதனைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில்  தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது. கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில் இதற்கு எதிரான போராட்டத்தை உலக நாடுகள் தொடர்ந்து நடத்தி வருகின்றன. இரவு பகலாக ஆய்வாளர்கள் தொற்றுக்கான தடுப்பு மருந்தை கண்டு பிடிக்க முயற்சித்து வருகின்றனர்.

மருந்து எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் உலக மக்கள் காத்திருக்கின்றனர். இந்தியாவும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அதற்கு பலனாக தற்போது தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசி 3ம் கட்ட சோதனைக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், ஐசிஎம்ஆர் உடன் இணைந்து தடுப்பூசியை தயாரித்து வருகிறது. இதில், 3ம் கட்ட சோதனை மற்ற சோதனைகளை காட்டிலும் கடினமானதாக இருக்கும். சுமார் 28,500 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுவர். 10 மாநிலங்களில் 19 இடங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |