தமிழகத்தில் மேலும் 26 புதிய தொழில் திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தை நோக்கி முதலீடு வரும் நிலையில் உயர்மட்ட அதிகாரக் குழு கூட்டம் நடத்தப்பட்டு இதுவரை 34 தொழில் திட்டங்களுக்கு அனுமதி என்பது வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழ்நாட்டுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் தொழில் முதலீடு வந்துள்ளதாகவும், இதன் மூலம் 23 ஆயிரம் நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்றும் தமிழக முதலமைச்சர் தலைமையில் உயர்மட்ட அதிகாரக் குழு கூட்டம் என்பது இன்று காலை தொடங்கி நடைபெற்றது. இதில் தொழில் முதலீடுகளுக்காக தமிழகத்தை நோக்கி நிறுவனங்கள் வரக் கூடிய நிலையில் அதனுடைய நிலை என்ன என்பது குறித்து உயர்மட்ட அதிகாரக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தொழில் தொடங்க ஒற்றைச்சாளர அனுமதிக்காக பல்வேறு விஷயங்கள் குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டது.
தமிழக முதலமைச்சர் தலைமையில் இன்று நடந்த மூன்றாவது கூட்டத்தில் நிலுவையில் இருந்த 26 தொழில் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு, அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் 25 ஆயிரத்து 213 கோடி ரூபாய் அளவிற்கான தொழில் முதலீடுகள் முழுமையாக செயல்பாட்டுக்கு வர இருப்பதாகவும், இதன் மூலமாக சுமார் 49 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் விரைவாக உருவாக்குவதை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.