தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி ஆரம்பிக்க இருப்பதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
மருத்துவ படிப்பிற்கு தகுதித் தேர்வாக நீட் தேர்வு கருதப்படுகிறது. இத்தேர்வை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக 2017ம் ஆண்டில் இருந்து பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வருடம் வருகிற நவம்பர் ஒன்றாம் தேதி இலவச நீட் பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. கொரோனா காரணமாக ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதுபற்றி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. கோவையில் உள்ள தனியார் நிறுவனம் சார்பாக இந்த இலவச பயிற்சி இ- முறை மூலம் கொடுக்கப்படுகின்றது. இந்த பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மாணவர்கள் அவர்கள் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் பெயரை கொடுத்து பதிவு செய்து கொள்ளும்படி சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.