நகைச்சுவை நடிகர் வடிவேலு மீண்டும் அரசியலில் இணைய உள்ளதாக வந்த செய்தி புரளி என்று அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரை உலகில் முன்னணி நகைச்சுவை நடிகர் வடிவேலு ஆவார். தமிழ் சினிமாவில் இவர் நகைச்சுவை மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதன்முலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி இருக்கிறார். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் வெகுவாக கவரபட்டுள்ளார். இவர் சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருக்கிறார். இருப்பினும் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு பெரும் உதவி செய்து வருகிறார்.
இந்த நிலையில் வடிவேலு அவர்கள் பாஜக கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. தற்போது தமிழ் சினிமா நட்சத்திரங்களான கங்கை அமரன், ராதாரவி, நமீதா, காயத்ரி ரகுராம் ,குஷ்பு உள்ளிட்டோர் தேசிய கட்சியான பாஜகவில் இணைந்துள்ளனர் . இதனை தொடர்ந்து வடிவேலு இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து வடிவேலு கூறியபோது அரசியலா, கட்சியா அதெல்லாம் இல்லை. அது எல்லாம் புரளி என்று கூறியுள்ளார்.