பீகார் மாநிலம் அவுரங்காபாத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் திரு லாலு பிரசாத் யாதவின் மதனும், ராஷ்டிரிய ஜனதா தள கட்சித் தலைவருமான திரு தேஜஸ்வி மீது செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பிஹார் சட்ட பேரவைத் தேர்தல் வரும் 28ஆம் தேதி தொடங்கி 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதலமைச்சர் திரு நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சித் தலைவர் திரு தேஜஸ்வி யாதவ் தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று அவுரங்காபாத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் திரு தேஜஸ்வி யாதவ் கலந்து கொண்டார்.
அவர் உட்பட முக்கிய தலைவர்கள் மேடையில் அமர்ந்து இருந்தனர். அப்போது திரு தேஜஸ்வி யாதவ் நோக்கி செருப்புகள் வீசப்பட்டன. அவரின் இடது பக்கத் தோல் அருகே பறந்து சென்ற செருப்பு அதிர்ஷ்டவசமாக அவர் மீது படவில்லை. இரண்டாவதாக வீசப்பட்ட செருப்பு அவரது மடியில் விழுந்தது இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.