Categories
தேசிய செய்திகள்

பண்டிகைகளை வீட்டிலேயே கொண்டாடுங்கள்… அதுதான் நல்லது… மக்களுக்கு வேண்டுகோள்… ஒடிசா முதல் மந்திரி…!!!

ஒடிஸா மாநில மக்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே தசரா மற்றும் தீபாவளி பண்டிகை களைக் கொண்டாடி மகிழுங்கள் என்று அம்மாநில முதல்-மந்திரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒடிசா மாநிலத்தின் மக்கள் அனைவரும் துர்கா பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை களை தங்கள் வீட்டில் இருந்தபடியே கொண்டார்கள் என்று அம்மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ” கேரளாவில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, ஓணம் பண்டிகைக்கு பின்னர் அதிகரிக்க தொடங்கியுள்ளது. பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாதது மற்றும் முக கவசம் அணியாதது போன்ற நடவடிக்கைகளே இதற்கு முக்கிய காரணம்.

ஒடிசா மக்கள் அனைவரும் கொரோனாவால் கடந்த 7 மாதங்களாக பல்வேறு துன்பங்களைச் சந்தித்து வருகின்றனர். அதனால் தசரா மற்றும் தீபாவளி பண்டிகை களை மக்கள் அனைவரும் தங்கள் வீட்டில் இருந்தபடியே குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழுங்கள். ஒருபோதும் பொது இடங்களில் கூறாதீர்கள். மேலும் சமூக இடைவெளி, முக கவசம் அணிதல், கை கழுவுதல் போன்ற தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் கட்டாயம் கடைபிடியுங்கள்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |