Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மருத்துவ படிப்பு இட ஒதுக்கீடு… ஆளுநரை சந்தித்த… 5 அமைச்சர்கள்…!!!

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு மசோதா பற்றி ஆளுநரிடம் தமிழக அமைச்சர்கள் ஆலோசனை நடத்துகிறார்கள்.

நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கூடிய வகையில் தமிழக அரசு சட்டசபையில் மசோதா ஒன்று நிறைவேற்றியுள்ளது. அந்த மசோதா ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை ஆளுநர் எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை.

தற்போது மருத்துவ கவுன்சிலிங் விரைவாக தொடங்க உள்ள நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கும் வழிவகை செய்யக் கூடிய மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தமிழக அமைச்சர்கள் விஜயபாஸ்கர், அன்பழகன், செங்கோட்டையன், ஜெயக்குமார் மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோர் நேரில் சந்தித்து பேசுகிறார்கள்.

Categories

Tech |