Categories
உலக செய்திகள்

“அதிபர் ட்ரம்ப் கிட்ட பேசணும்” 13 மணி நேரம் டவரில் தொங்கிப் போராட்டம்…. இளைஞரின் செயலால் பரபரப்பு….!!

இளைஞர் ஒருவர் அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் பேச வேண்டும் என்று 13 மணி நேரம் டவரில் தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருப்பின ஆதரவு இயக்கத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் அமெரிக்காவில் சிகாகோ நகரில் இருக்கும் ட்ரம்ப் டவரில் டவரில் தொங்கிக்கொண்டிருந்த படி காணப்பட்டார். இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது, தான் உடனடியாக அதிபர் ட்ரம்பிடம் பேச வேண்டும். அதோடு ஊடகங்களை சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் தேவை ஏற்பட்டால் தனது உயிரைப் போக்கிக் கொள்ளவும் தயாராக இருப்பதாக அந்த இளைஞர் கூறினார். அதிகாரிகள் இளைஞருடன் பேச்சுவார்த்தை நடத்த 13 மணி நேரத்திற்கு பிறகு முடிவு கிடைத்தது. டவரில் இருந்து அந்த இளைஞரை மீட்ட காவல்துறையினர் கைது செய்தனர். அதிபருடன் பேச வேண்டும் என்பது குறித்து அந்த இளைஞர் வேறு எந்த தகவலையும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |