தலை சுற்றுவது 99 சதவீதம் மிகவும் சாதாரண பிரச்சனை. ஆனால் தலை சுற்றும் போது ஏற்படும் பய உணர்வை தடுக்க முடியாது. தலைசுற்றுபவர்களைப் பார்த்தால் சாதாரணமாக தோன்றும். ஆனால் அவர்களை சுற்றி என்ன நடக்கின்றது என்ற அச்சம் அவர்களுக்கு இருக்கும்.
எந்த நிலையில் இருக்கும் போது தலை சுற்றுகிறதோ அதே நிலையில் இருந்தால் சில நிமிடத்தில் சரியாகிவிடும். ஆனால் பயத்தில் அங்குமிங்கும் அலைந்தால் சரியாக காலதாமதம் ஆகும். சிலருக்கு தலைசுற்றல் ஏற்படுவதற்கான முக்கிய காரணம் பித்த நோயாக இருக்கும்.
தலை சுற்றாமல் இருக்க
தேனுடன் பச்சை நெல்லிக்காயை கலந்து சாப்பிடுவது தலைசுற்றல் பிரச்சினையிலிருந்து தீர்வு கொடுக்கும்.
இஞ்சியை துண்டு துண்டாக வெட்டி இரண்டு அல்லது மூன்று நாட்கள் தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் சரியாகும்.
செம்பு பாத்திரத்தில் உணவு சாப்பிட்டு வருவதனால் உடலில் இருக்கும் உஷ்ணம் சீராகி கண்கள் ஒளி பெறும். இதனால் பித்தத்தால் ஏற்பட்ட நோய்கள் அனைத்தும் குணமாகும்.
வெள்ளி பாத்திரத்தில் உணவு சாப்பிடுவதால் பித்த கோபம், சிலேத்தும கோபம் போன்றவை நீங்கி மனது மகிழ்ச்சி பெறும். அதுமட்டுமன்றி உடலும் அழகாக தோன்றும்.
வெண்கலப் பாத்திரத்தில் சாப்பிடும்போது உடல் களைப்பு நீங்குவதுடன் உதிர பித்தத்தையும் சரிசெய்கிறது.