Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட… பிளஸ்டூ மாணவி… விபரீத முடிவால் நடந்த சோகம்…!!!

நெல்லை அருகே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பிளஸ் 2 மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாளையங்கோட்டை சீவலப்பேரி அருகே இருக்கின்ற காட்டாம் புலி என்ற கிராமத்தில் மாரியப்பன் என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு 17 வயதில் அபிநயா என்ற மகள் உள்ளார். பிளஸ் 2 படித்து வரும் அந்த மாணவி அடிக்கடி உடல்நல குறைவு ஏற்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். அதனால் மனமுடைந்த அபிநயா, வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தன் உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார்.

அதனால் உடல் கருகி அலறிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அபிநயா அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பற்றி சீவலப்பேரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

Categories

Tech |