கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாய நிலத்திற்கு தடையில்லா சான்றிதழ் வழங்க சார்பதிவாளர் கேட்ட தலா பத்தாயிரம் ரூபாய் தொகைக்கு வழியில்லாததால் தங்களுக்கு அந்த தொகையை வழங்கக்கோரி 2 விவசாயிகள் மாவட்ட ஆட்சியரை அணுகியதால் சலசலப்பு ஏற்பட்டது.
பொர்கோர் ஒன்றியம் குருவிநாணயம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முனிரத்தினம், சக்திவேல் ஆகிய இரண்டு விவசாயிகள் தங்கள் விவசாய நிலத்திற்கு தடையில்லா சான்றிதழ் வழங்க கோரி சார் பதிவாளரை அணுகினார். தலா பத்தாயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் மட்டுமே தடையில்லா சான்றிதழ் வழங்க முடியும் என சார்பதிவாளர் கூறியதாக புகார் எழுந்துள்ளது.
10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்கும் அளவுக்கு தங்களிடம் பணம் வசதி இல்லாததால் விவசாயிகள் இருவரும் மாவட்ட ஆட்சியரிடம் அந்த தொகையை கோரி பெறுவதற்காக ஆட்சியர் அலுவலகம் சென்றனர். அங்குள்ள ஊழியர்களிடம் தாங்கள் ஆட்சியரை சந்திக்க வந்து இருப்பதற்கான காரணத்தையும் தெரிவித்ததும் அங்கிருந்தோர் அதிர்ச்சி அடைந்தனர்.