Categories
தேசிய செய்திகள்

என்னாது….! ”செய்தித்தாள் மூலம்” கொரோனா பரவுமா ?

செய்தித்தாள்கள் மூலம் பரவும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்று உலகையே புரட்டிப் போட்டுள்ளது. இதற்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு இதன் தாக்கம், பரவளில் இருந்து ஒவ்வொரு நாடும் மீண்டு வருகின்றன. இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார்.

செய்தித்தாள்கள் மூலம் கொரோனா பரவும் என்ற தகவல் வெளியாகிய நிலையில் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த கொரோனா காலத்தில் செய்தித்தாள் படிப்பது முற்றிலும் பாதுகாப்பானது, காலை நேர தேநீருடன் செய்தித்தாள் படிப்பது நல்ல அனுபவம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |