கும்பகோணத்தில் சிவாலயங்களில் நவராத்திரி விழா தொடங்கியது.
கும்பகோணத்தில் உள்ள சிவாலயங்களில் நவராத்திரி விழா ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் அமாவாசை முதல் 10 நாட்களுக்கு நடைபெறும். இந்த ஆண்டு விழா தேவேந்திர பூசையுடன் நேற்று தொடங்கியது. இதனையொட்டி அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நேற்று நடந்தது. அம்பாளுக்கு நவசக்தி அர்ச்சனையும், மாலையில் சிறப்பு அலங்காரத்தில் சகஸ்ரநாம அர்ச்சனையும் நடைபெற்றது.
உற்சவ மண்டபத்திற்கு அம்பாள் எழுந்தருள செய்யப்பட்ட தேவேந்திர பூஜையும் நடந்தது. 17-ஆம் தேதி முதல் 25-ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் காட்சி அளிப்பார். விழா நிறைவாக 26 ஆம் தேதி விஜயதசமி அன்று பிரகார புறப்பாடு எழுந்தருளி யாக ஸ்தானம் செய்யப்படுகிறது.