Categories
தேசிய செய்திகள்

இனி அப்படியே சாப்பிடலாம்… கழற்ற வேண்டிய அவசியமில்லை… இதோ புதிய ஜிப் போட்ட முகக்கவசம்…!!!

கொல்கத்தாவில் உள்ள உணவகம் ஒன்று ஜிப் வைத்த முகக்கவசங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.

கொல்கத்தாவில் உள்ள உணவகம் ஒன்றில் தனது வாடிக்கையாளர்களுக்கு ஜி போட்ட முக கவசங்களை வழங்கி ஒரு புதுமையான நடவடிக்கையை எடுத்து வருகிறது. அதிக அளவு மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும்போது முக கவசத்தை மறந்து விடுகிறார்கள். அதனால் பல்வேறு இடங்களில் அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இப்படி ஒரு சூழ்நிலையில் கொல்கத்தாவில் உள்ள ஒரு உணவகம் ஜிப்பை வைத்த கவசங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. அதன் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயம் தினசரி பழக்கமாக மாறும் என்பதே அந்த உணவகத்தின் முக்கிய குறிக்கோள். மேலும் முக கவசம் கட்டாயம் என்பதால், ஜிப் அம்சத்துடன் அது இருந்தால், அதை கழற்ற வேண்டிய அவசியம் ஏற்படாது என்ற உணவகத்தின் உரிமையாளர் கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், “முக கவசம் கட்டாயம் என்பதால், நீங்கள் இங்கே உணவு உண்ணும்போது, ஜிப் அவுட் செய்து கொண்டு சாப்பிடுங்கள், நீங்கள் சாப்பிட்டு முடித்தவுடன் ஜிப் இன் செய்து கொள்ளுங்கள். இந்த சிறப்பு அம்சம் கொண்ட முக கவசங்களை சாப்பிடும்போது கழட்டாமல் அப்படியே அணிந்து கொள்ளலாம். எந்த ஒரு கூடுதல் கட்டணமும் இல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு இந்த முக கவசங்களை வழங்கி வருகிறோம். இருந்தாலும் அது கட்டாயம் இல்லை. அவர்கள் விருப்பம் கொண்டால் மட்டுமே அதனை அறிந்து கொள்ளலாம்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |