Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

அடுத்தடுத்து பரபரப்பு…. 2 சூப்பர் ஓவர் ஆட்டம்…. கடைசி கட்ட போராட்டம்… பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி …!!

மும்பை அணிக்கெதிரான போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அடுத்தடுத்து சூப்பர் ஓவர் வரை சென்று வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த நேற்று இரண்டாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதியது. முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன் அடித்தது எடுத்தது. பின்னர் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன் எடுத்து ஆட்டம் டை ஆனது.

இதைத்தொடர்ந்து சூப்பர் போட்டி நடந்தது. இதில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணிக்கு மும்பை இந்தியன் சார்பில் பும்ரா முதல் வரை அற்புதமாக வீசினார். இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 5 ரன் மட்டுமே எடுத்து 2 விக்கெட் பறிகொடுத்தது. பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்க பஞ்சாப் அணி சார்பில் முகமத் ஷமி முதல் ஓவரை அற்புதமாக வீசியதால் மும்பை இந்தியன்ஸ் அணியும் 5 மட்டுமே எடுத்து ஒரு விக்கெட்டை பறிகொடுத்தது.

இதனால் இந்த போட்டி மீண்டும் இரண்டாவது சூப்ப ஓவருக்கு சென்றது. அதில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 11 ரன்கள் அடிக்க, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 12 அடித்து வெற்றி பெற்றது.

Categories

Tech |