Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

கடைசி வரை திக்,திக்…. ”மீண்டும் 2ஆவது சூப்பர் ஓவர்” அசத்திய பும்ரா, ஷமி

மும்பை – பஞ்சாப் அணிகள் மோதிய போட்டி அடுத்தடுத்து இரண்டு முறை சூப்பர் ஓவருக்கு சென்றது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சூப்பர் சண்டேயான இன்று ( 18/10/20)தில் நடந்த இரண்டு போட்டியுமே பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய முதல் போட்டி சூப்பர் ஓவர் வரை சென்று, கொல்கத்தா வெற்றி பெற்றது.

அதேபோல கிங்ஸ் லெவன் பஞ்சாப் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய இரண்டாவது ஆட்டமும் சூப்பர் ஓவருக்கு சென்றது. இதில் முதலில் பேட் செய்த சென்னை மும்பை இந்தியன்ஸ் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன் குவித்தது அதைத் தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணியின் கேப்டன் கேஎல் ராகுலின் அற்புதமான பேட்டிங்கால் அந்த அணியும் 6விக்கெட் இழப்பிற்கு 176 ரன் எடுத்து போட்டி சமன் ஆகிய நிலையில் சூப்பர் சென்றது.

சூப்பர் ஓவரில் மும்பை அணியின் பூம்ரா முதல் ஓவரை  வீசி  2 விக்கெட்டுக்கு எடுக்க பஞ்சாப் அணி வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்து. பின்னர் ஆடிய மும்பை அணியும் வெறும் 5 ரன்கள் அடித்த நிலையில் மீண்டும் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது. பஞ்சாப் அணி சார்பில் கடைசி ஓவரை ஷமி அசத்தலாக பந்து வீசியது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |