Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரோஹித் சர்மா VS கே.எல் ராகுல்…. அணியில் யார், யார் ? பட்டியல் ரெடி…!!

மும்பை – பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் தற்போது இறுதி கட்டத்தைக் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதில் இன்று (அக்.18) நடைபெறும் 36ஆவது லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் மோதுகிறது.

அபுதாபியிலுள்ள ஷேக் ஸாயித் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இப்போட்டியில் வெற்றி பெற்றால் மும்பை இந்தியன்ஸ் அணி, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பதால், இன்றைய ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் லெவன்: கே.எல்.ராகுல், எம் அகர்வால்,  கெய்ல்,  பூரன்,  மேக்ஸ்வெல், ஹூடா,  ஜோர்டான்,  அஸ்வின்,  பிஷ்னோய், எம் ஷமி,  சிங்

மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் ஷர்மா, டிகாக், எஸ் யாதவ்,இஷான் கிஷன்,  ஹார்டிக் பாண்ட்யா,  பொல்லார்ட், குர்னால் பாண்ட்யா, கூல்டர்-நைல், சஹார், போல்ட்,  பும்ரா

Categories

Tech |