ஆன்லைன் மூலம் சினிமா டிக்கெட் முன்பதிவு செய்ய வசூலிக்கப்படும் கூடுதல் தொகைக்கு கேளிக்கை வரி விதிப்பை ரத்து செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இன்றைய கால சூழலில் சினிமா உலகம் ஒரு லாபத்தை கொடுக்கக்கூடிய மிகப்பெரிய துறையாக இருந்து வருகிறது. சாமானிய மக்களின் மன அழுத்தத்தைப் போக்கி, மகிழ்ச்சியை உணர கூடிய ஒரு மிகச் சிறந்த பொழுதுபோக்கு தளமாக சினிமாத்துறை விளங்குகிறது. வாரத்தில் ஒரு நாளாவது சினிமாவுக்கு செல்ல வேண்டும் என்று பலரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்.
அதே நேரத்தில் அங்கு வாங்கப்படும் கட்டண வசூல் குடும்ப வாழ்க்கை வாழும் சாமானியர்களை தியேட்டர் பக்கம் செல்லாத வண்ணம் திணற வைக்கின்றது. இந்த நிலையில்தான் சினிமா பிரியர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் வகையில் முக்கியமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் சினிமா டிக்கெட் முன்பதிவு செய்ய வசூலிக்கப்படும் கூடுதல் தொகைக்கு கேளிக்கை வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திரையரங்கிற்கு நுழைவதற்கு அளிக்கப்படும் கட்டணத்திற்கு மட்டுமே கேளிக்கை வரி விதிக்க முடியும். செல்போனில் முன்பதிவு செய்வதற்கு வசூலிக்கப்படும் கூடுதல் தொகைக்கு கேளிக்கை வரி கிடையாது என்று ஐகோர்ட் உத்தரவிவிட்டுள்ளது சினிமா பிரியர்கள் மகிழ்ச்சி அளித்துள்ளது.