Categories
கிரிக்கெட் விளையாட்டு

கேப்டன் ‘கூல்’ க்கு என்ன ஆச்சு ? தவறி போன முடிவு…. தோனி கொடுத்த விளக்கம் …!!

நேற்றைய போட்டியில் கடைசி ஓவரை ஜடேஜாவுக்கு கொடுத்ததால் தோனியை  பலரும் விமர்சித்து வருகின்றனர்.

ஐபிஎல் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிடல் அணி மோதியது. வெற்றி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய சென்னை அணிக்கு நேற்றைய போட்டி சறுக்கலை ஏற்படுத்தியது. டெல்லி கேப்பிடல் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் அதிரடியாக விளையாடி சதம் அடித்தால், சென்னை அணியின் வெற்றி பறிபோனது.

கடைசி  ஓவர்  தோனி ஜடேஜாவுக்கு கொடுத்தது ரசிகர்களால் மிகவும் ரசிகர்களை விமர்சிக்கப்பட்டு வருகிறது.கடைசி ஓவரில் அக்ஷர் பட்டேல் அடுத்தடுத்து 3 சிக்சர்களை அடித்து டெல்லி கேப்பிடல் அணியின் வெறியை உறுதி செய்தார். கடைசி ஓவரில் 16 ரன் எடுக்க வேண்டும் என்ற நிலையில்ஜடேஜா வீசிய ஓவரில் 22 ரன்கள் விட்டுக்கொடுத்தார். தோனியின் இந்த முடிவு கடுமையான விமர்சனத்துக்களாக்கப்பட்ட நிலையில், தோனி இறுகுறித்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், பிராவோ முழு உடல் தகுதியுடன் இல்லை. களத்தை விட்டு சென்ற அவர் திரும்ப வர முடியவில்லை. இதன் காரணமாகத்தான் ஜடேஜா கடைசி ஓவரை வீச வேண்டிய நிலை ஏற்பட்டது. கடைசி ஓவர் வீசுவது கரண் ஷர்மாவா அல்லது ரவீந்திர ஜடேஜாவா என்பதுதான் வாய்ப்பாக இருந்தது, ஜடேஜா வீசினார் என்று தெரிவித்தார்.

Categories

Tech |