Categories
கிரிக்கெட் விளையாட்டு

விஜய் பட ஸ்டைலில்…. CSK போட்ட ட்விட்…. மெர்சலான புள்ளிங்கோ …!!

நடிகர் விஜயின் பிகில் பட வரிகளை உள்ளடக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் ட்விட் பதிவிட்டதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பரபரப்பான சூழலில் நேற்று நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் ஆடி  179 ரன்கள் எடுத்தும் சென்னை அணியால் வெற்றி பெற முடியவில்லை. டெல்லி கேப்பிட்டல் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் சதத்தால் சென்னையின் வெற்றி கனவு பறிபோனது. இந்தப் போட்டி தோல்வியில் பல்வேறு விமர்சனங்களுக்கு கேப்டன் தோனி உள்ளாக்கப்பட்டுள்ளார்.

குறிப்பாக கடைசி ஓவரில் 16 ரன்கள் அடிக்க வேண்டிய நிலைமை இருந்தபோது ஜடேஜாவுக்கு ஓவர் கொடுத்தார். அந்த ஓவரில் 3 சிக்ஸரை அக்சர் பட்டேல் விளாச 22 ரன்கள் கிடைத்தது. தோனியின் இந்த முடிவு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதனிடையே சென்னை அணி வெற்றி பெற தவான் போன்ற டெல்லி வீரர்களை அடிக்க விடாமல் கட்டுப்படுத்த டாட் பால் மிக அவசியமாத்தாக இருந்தது. இதனை வலியுறுத்தி நேற்று போட்டி நடந்து கொண்டிருக்கும்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில் விஜய் நடித்த பிகில் பட வரிகளை உள்ளடக்கி டாட் பால் முக்கியம் பிகிலு என்று ட்வீட் போடப்பட்டுள்ளது. இது விஜய் ரசிகர்களுக்கு, விஜய் புள்ளிங்கோக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |