அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை கண்டித்து பல்கலைக்கழகம் முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விவகாரத்தில் துணைவேந்தர் சூரப்பா மத்திய அரசுக்கு தன்னிச்சையாக கடிதம் எழுதிய விவகாரத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்திய மாணவர் சங்கம் சார்பில் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு முன்பு துணைவேந்தர் சூரப்பாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநில அரசின் உரிமைகளை பறிக்க மத்திய அரசு முயல்வதாகவும் துணைவேந்தர் சூரப்பா அண்ணா பல்கலைக்கழகத்தை கூறு போட முயற்சிப்பதாகவும் இந்திய மாணவர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.