Categories
தேசிய செய்திகள்

நீட் தேர்வு முடிவில் பெரும் குளறுபடி…. நாடு முழுவதும் திடீர் பரபரப்பு …!!

நீட் தேர்வு முடிவுகள் வெளியானதில் குளறுபிடி இருப்பதாக தகவல் வெளியாகி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு ( நீட் )  நடத்தப் பட்ட நிலையில் அதற்கான தேர்வு முடிவுகள் நேற்றைய தினம் மாலை வெளியானது. இதனை மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தனது அதிகார பூர்வமாக ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். தேர்வு முடிவுகள் வெளியாகும் அந்த இணையதளத்தில் நேற்றில் இருந்தே ஒரு குளறுபடிகள் ஏற்பட்டது. தொழில்நுட்ப பிரச்சனை என்று தெரிவித்து இது சரிசெய்யப்பட்டது.

இந்த நிலையில்தான் தற்போது முழுமையான தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் மொத்தம் தேர்வு எழுதியவர்கள், தேர்ச்சி பெற்றவர்களின், தேர்ச்சி சதவீதம் மற்றும் எண்ணிக்கை என்பது குளறுபடியை ஏற்படுத்தியுள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.திரிபுரா மாநிலத்தை எடுத்துக்கொண்டால் தேர்வு எழுதியவர்கள் மொத்தம் 3 ஆயிரத்து 536 பேர், இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை என்பது 88,889பேர் என்று தேர்வு முடிவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல உத்தரகாண்ட் மாநிலத்தில் நீட் தேர்வை எழுதிய மாணவர்கள் எண்ணிக்கையானது 12,047பேர் ஆனால் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் என 37,301என குறிப்பிடப்பட்டுள்ளது.தெலுங்கவில் 50,392பேர் தேர்வு எழுதியதில் 1,738பேர் மட்டுமே தேர்ச்சி என குறிப்பிடப்பட்டு தேர்ச்சி சதவீகிதம் 49.15 % என அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேஷத்தில் 1.56 லட்சம் பேர் தேர்வு எழுதி 7,323பேரே பாஸ் ஆகிய நிலையில் தேர்ச்சி விகிதம் 60.79% என குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |