பொள்ளாச்சி அடுத்துள்ள நவமலை ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியாகும் இங்கு 40க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இவர்கள் அருகில் உள்ள தோட்டங்களுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர். அருகில் நவமலை மின் உற்பத்தி நிலையம் உள்ளது. மின்சாரம் ஊழியர்கள், குடும்பங்கள் 150க்கும் மேற்பட்டோர் வசித்தும் வருகின்றார்கள். இவர்களுக்கு முறையான குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நான்கு மாதங்களுக்கு முன்பு வனப்பகுதிகள் குடிநீர் இணைப்பு குழாய்களை காட்டு யானைகள் சேதப்படுத்தி இன்று வரை சரி செய்யாததால் குடிநீர் இல்லாமல் அருகிலுள்ள ஓடைகளுக்கு சென்று குடிநீருக்கு பயன்படுத்துகின்றனர். பலமுறை மின்சாரத்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தும் குடிநீர் குழாய் சரி செய்யாததால் மிகவும் சிரமப்படுவதாக தெரிவித்தனர்.