Categories
டெக்னாலஜி

பேஸ்புக்கில் பதிவு செய்த தொலைபேசி எண்களை நீக்குவது எப்படி..?

சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் இன்று தனிநபர் செய்திகள் கசிந்து வருகிறது. இந்நிலையில், பேஸ்புக்கில் பதிவான தொலைபேசி எண்களை நிக்கும் முறையை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் தனிநபரின் தகவல்கள் பெரும்பாலும் நாம் திட்டமிட்ட வகையிலோ அல்லது தவறுதலாகவோ பதிவு செய்யப்படுகிறது. இந்நிலையில் ஸ்மார்ட் போன்களில் பதிவு செய்யப்பட்டுள்ள தொலைபேசி எண்களை பேஸ்புக்கிலும் பதிவு செய்யும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இது பேஸ்புக் பயனாளர்களுக்கு தெரியாமலும் இருக்கலாம். எனவே பாதுகாப்பு கருதி பேஸ்புக்கிள் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்களை அழிக்கும் வாய்ப்பு உள்ளது.

Related image

அதாவது பேஸ்புக் பயனாளர்கள் அவர்கள் பேஸ்புக் பக்கத்தை Log on செய்து விட்டு  பின்னர் https://www.facebook.com/mobile/facebook/contacts/ எனும் இணையதள முகவரிக்கு சென்று பிறகு அப்பகுதியில் உள்ள Calls and Text HIstory, Invitations Sent மற்றும் Contacts என மூன்று டேப்கள் இருக்கும். அவற்றின் கீழே காணப்படும் Delete All வசதியினை தேர்வு செய்து கிளிக் செய்ய வேண்டும். பின்னர் அனைத்து தொலைபேசி எண்களும் அழிந்துவிடும்.

Categories

Tech |