விஜய், விஜய்சேதுபதி சேர்த்து வெளியிட்ட திரிஷா வீடியோ லைக்குகளை அதிகம் பெற்று வருகின்றனர்:
திரிஷா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ரசிகர்கள் மனதை கவர்ந்தவர். தற்போது அவர் நடிப்பில் பரமபதம் விளையாட்டு, கர்ஜனை, ராங்கி போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. மேலும் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
திரிஷா நடிப்பில் வெளிவந்த ‘விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை இயக்குய இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் தற்போது சிம்புவுடன் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற குறும்படத்தில் நடித்துள்ளார். தற்போது திரிஷா, விஜய்யுடன் நடித்த ‘கில்லி’ படத்தின் காட்சியையும் விஜய் சேதுபதியுடன் நடித்த ‘96’ படங்களின் காட்சியையும் இணைத்து உருவாக்கியுள்ள ஒரு வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதற்கு ‘டூ இன் ஒன்’ என்று குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர்.
https://twitter.com/trishtrashers/status/1316678406386327552