Categories
கொரோனா புதுச்சேரி மாவட்ட செய்திகள்

புதுச்சேரியில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு…!!

கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் தவறாது கடைப் பிடிக்க வேண்டும் என புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அறிவுறுத்தியுள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 245 பேருக்கு கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 32 ஆயிரத்து 486 ஆக அதிகரித்தது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை  570 ஆக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர் முக கவசம் அணிதல், கைகளை சுத்தமாக வைத்திருந்தால், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் தவறாது பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.

Categories

Tech |