பிக்பாஸ் 4 நிகழ்ச்சியின் 17-வது போட்டியாளராக அர்ச்சனா நுழைத்துள்ளது போட்டியாளர்களை உற்சாகமடைந்துள்ளனர்.
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி, மக்களின் பெரும் ஆதரவுடன் நான்காவது சீசன் கடந்த அக்டோபர் 4ஆம் தேதி தொடங்கியுள்ளது. இந்நிலையில், சீசன்-4ல் போட்டியாளர்களாக 16 பேர் கலந்து கொண்டுள்ளனர். அவர்களுடன் தொகுப்பாளரான அர்ச்சனா, பிக்பாஸ் 4ன் ஆரம்பத்திலேயே போட்டியாளராக வருவார் என எதிர்பார்ப்பில் இருந்தனர்.
ஆனால் அவர் தொகுப்பாளராக பணியாற்றும் சேனல் நிர்வாகம் அவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க தடை விதித்துள்ளனர்.அதனால் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. தற்போது பிரச்சனைகள் எல்லாம் முடிந்து விட்ட நிலையில் 17-வது போட்டியாளராக பிரபல தொகுப்பாளரான அர்ச்சனா, பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். திடீர் வருகையை பார்த்து உற்சாகமடைந்த மற்ற போட்டியாளர்கள், அவரைஅன்புடன் கட்டியணைத்து வரவேற்றுள்ளனர் .