Categories
லைப் ஸ்டைல்

நாம் குடிக்கும் தண்ணீர்…. என்ன பலன்….? ஒப்பிட்டு பாருங்கள்…. மாற தோன்றும்…!!

சுத்திகரிக்கப்பட்ட மினரல் வாட்டரில் இருந்து ஆற்றுத் தண்ணீருக்கு மாற வேண்டிய அவசியம் என்ன என்பது பற்றிய தொகுப்பு

தெருக்குழாயில் வரும் தண்ணீரையும், ஆற்றுத் தண்ணீரையும், கிணற்றுத் தண்ணீரையும் கைகளில் அள்ளி குடித்ததுண்டு. அப்போதைய காலகட்டத்தில் யாரும் நோயினால் பாதிக்கப்பட்டதில்லை. அதோடு தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் நிலை உருவாகும் என்றும் யாரும் நினைக்கவில்லை. ஆனால் தற்போது ஆர்.ஓ வாட்டர், பில்டர் வாட்டர், மினரல் வாட்டர் என வித்தியாசம் வித்தியாசமாக நாம் குடிக்கும் தண்ணீரினால் எந்த பலனும் நமது உடலுக்கு கிடைப்பதில்லை.

தாகத்தை தணிப்பதை மட்டும் சரியாக செய்கிறது. ஆனால் தற்போது நாம் குடிக்கும் கேன் தண்ணீரினால் நமக்கு மட்டுமல்லாது நமது குழந்தைகளுக்கும் ஆபத்து ஏற்பட உள்ளது. உடலில் இருக்கும் எலும்புகள் பலத்துடன் இருக்க கால்சியம் சத்து மிகவும் அவசியம். தண்ணீரில் கால்சியம் சத்து அதிகம் இருக்கும். ஆனால் நாம் இப்போது குடித்து வரும் தண்ணீரில் கால்சியம் மட்டுமல்ல எந்தவிதமான சத்தும் கிடையாது. இதனால் நாளடைவில் நமது எலும்புகள் பலமிழந்து மருத்துவச் செலவை ஏற்படுத்தும்.

அதற்கு பதிலாக பழைய கால கட்டத்தை போன்று குழாய் தண்ணீர், ஆற்றுத் தண்ணீர், கிணற்று தண்ணீர் போன்றவற்றை குடித்தால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதோடு ஆரோக்கியமுடன் இருக்க முடியும். குழாயில் வரும் தண்ணீர் மாசடைந்து வருவது பல இடங்களில் நடக்கிறது. ஆனால் அதனை இயற்கையான முறையில் சுத்திகரித்து பருகுவதால் நமது உடல்நலத்தை பாதுகாக்க முடியும். நமது முன்னோர்கள் மண்பானை தண்ணீரை தான் குடித்து வந்தனர்.

தண்ணீரில் எந்த கிருமிகள் இருந்தாலும் அதனை மண்பானை உறிஞ்சிவிடும். மண்பானையில் தண்ணீரை வைத்து இரண்டு முதல் ஐந்து மணி நேரத்தில் அனைத்து கிருமிகளையும் மண் பானை உறிஞ்சிக் கொண்டு மண் சக்தியை கொடுக்கிறது. மிகச்சிறந்த தண்ணீர் சுத்திகரிப்பு என்றால் அது மண்பானை தான். மண்பானையில் தண்ணீர் வைத்து குடிப்பதனால் நமக்கு பிராண சக்தி அதிகரிக்கும் என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |