சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த கணவரை காவல்துறையினர் கைதுசெய்தனர்.
தலைவாசல் அருகில் உள்ள கிராம கோட்டை கிழக்கு தெருவை சேர்ந்தவர் மருதமுத்து. லாரி ஓட்டுநரான இவர் மனைவி தெய்வானை மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார். மனைவி தெய்வானையுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும். தெய்வானையை அடித்து துன்புறுத்துவதாகவும் கூறப்படுகிறது. குடும்ப பிரச்சினை காரணமாக மருதமுத்து மனைவி தெய்வானை மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார்.
இதில் தெய்வானை உட்பட மூன்று பேர் மீது தீ பற்றியது. இதையடுத்து மூவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தில் பலத்த தீ காயமடைந்த 3 வயது குழந்தைக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதை அடுத்து தலைவாசல் காவல் துறையினர் மருதமுத்துவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.