எல்.முருகன் இருந்தால் தாமரை மலராது என்று டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் முக்கிய கட்சிகளான அதிமுக மற்றும் திமுக மும்முரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இல்லாத தேர்தல் எந்த காரணத்தினாலும், ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக களம் இறங்குவதாலும் இம்முறை தேர்தல் அதிகப்படியான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் திமுக சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைத்து இன்று தேர்தல் அறிக்கை குழு கூட்டத்தை நடத்தியது. இதுபற்றி பாஜக தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் பேசியபோது திமுகவின் தேர்தல் அறிக்கை ஜீரோ தான் என கூறியுள்ளார். எல்.முருகனின் கருத்திற்கு திமுக சார்பாக பதிலளித்த டி.கே.எஸ் இளங்கோவன் “முருகன் போன்றவர்கள் உள்ளவரை தாமரை என்றும் மலராது, பாஜகவும் வளராது” என்று கூறியுள்ளார்.