நடிகை கங்கனா ரணாவத் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டடுள்ளது .
மத்திய அரசு வேளாண் சீர்திருத்த சட்டம் உள்ளிட்ட 3 சட்ட திருத்தங்களை சமீபத்தில் அமல்படுத்தியது. இச்சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிராக உள்ளதாகவும், இந்த சட்ட திருத்தங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை கங்கனா ரணாவத் ,தனது டுவிட்டர் பக்கத்தில்,“மத்திய அரசின் வேளாண் சீர்திருத்த சட்ட திருத்தங்களுக்கு எதிராக மக்கள் மத்தியில் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்தும் விவசாயிகள் பயங்கரவாதிகளுக்கு சமமானவர்கள்” என்று கூறியிருக்கிறார்.இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதையடுத்து துமகூரு மாவட்டம் கியாத்தசந்திரா பகுதியை சேர்ந்த வக்கீலான ரமேஷ் நாயக் என்பவர், விவசாயிகளை பயங்கரவாதிகள் என்று விமர்சித்த நடிகை கங்கனா ரணாவத் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என துமகூரு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்ததை தொடர்ந்து போலீசார் நடிகை கங்கனா ரணாவத் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.