பலாப்பழத்தின் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:
பலாப்பழம் முக்கனிகளில் இரண்டாவது கனியாக அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது. அது உடல் உஷ்ணத்தை குறைத்து, பித்த மயக்கம், கிறுகிறுப்பு ஆகியவற்றை குணமாக்கும்.
‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்பதற்கிணங்க பலாப்பழத்தை அளவுடன் தான் உண்ண வேண்டும். அதனை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் வயிறு மந்தமாகி வயிற்று வலியையும், வாந்தியையும் உண்டாக்கிவிடும்.
பலாப்பழத்தை தேனில் நனைத்து உட்கொண்டுவர மூளை நரம்புகள் வலுப்பெறும். வாத நோய், பைத்தியம் போன்றவை நீங்கும்.
பலா பிஞ்சினை அதிகமாக உண்பதால் செரியாமை, வயிற்று வலி போன்றவை ஏற்படுவதுடன் சொரிசிரங்கு, கரப்பான், கோழைக்கட்டு, இருமல், இரைப்பு, வாத நோய்கள் ஏற்படும்.