Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

வாங்க பேசலாம்…. தொடங்கியது கூட்டம்…. திமுகவின் அடுத்த மூவ் …!!

சட்டமன்ற தேர்தலுக்காக திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம் தொடங்கியுள்ளது.

திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் முதல் கூட்டம் டி ஆர் பாலு தலைமையில் தொடங்கியுள்ளது. இதற்காக திமுக சார்பில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. டி ஆர் பாலு, துணை பொதுச்செயலாளர்கள் சுப்புலட்சுமி, ராசா, அந்தியூர் செல்வராஜ், எம்பிக்கள் இளங்கோவன், கனிமொழி, திருச்சி சிவா ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இதில் பேராசிரியர் ராமசாமி பங்கேற்றுள்ளார். இவர் தொடர்ச்சியாக தேர்தல்அறிக்கை குழு கூட்டத்தில் இருக்கக் கூடியவர்.

10 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் இல்லாமல் இருக்கக் கூடிய நிலையில் பல்வேறு முக்கியமான விஷயங்கள் இதில் இடம்பெற இருக்கின்றன. தமிழகத்திற்கு 5 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு கடன் இருக்கிறது எனவே வரக்கூடிய தேர்தல் அறிக்கையில் எந்த மாதிரியான சமூக நலத்திட்டங்கள் இடம்பெறச் செய்யலாம் என்பது குறித்து இந்த கூட்டம் விவாதிக்க இருக்கின்றது .

தேர்தல் அறிக்கை இந்த குழு மாவட்ட வாரியாக சென்று, அந்த மாவட்டத்தில் இருக்க கூடிய பிரச்சினைகளை கேட்டு அவற்றையும் தேர்தல் அறிக்கையில் இடம் பெறச் செய்யும் பணியை திட்டமிட்டுள்ளது. திமுகவை மற்ற அணிகளாக இருக்க கூடிய தகவல் தொழில் நுட்ப அணி, இளைஞரணி அணி என பல நிர்வாகிகளுடன் ஆலோசனையை கேட்க இருக்கின்றது.

அதுமட்டுமில்லாமல் புதிதாக ஒரு ஈமெயில் ஐடியை கொடுத்து பொது மக்களும் தங்களுடைய கருத்துகளை தெரிவிக்கலாம் என்ற ஒரு விஷயத்தை அறிவிக்கப்படுகிறார்கள். கொரோனா பேரிடர் காலத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினையை மீட்பது எப்படி ? என்றெல்லாம் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் என தெரிகின்றது.

Categories

Tech |