Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“19 வயது மகன் மரணம்” பெற்றோர் எடுத்த முடிவு…. மறுவாழ்வு பெற்ற 5 பேர்…!!

விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு 5 நோயாளிகள் மறுவாழ்வு பெற்றுள்ளனர்

திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் பரவாக்கோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் ராஜேந்திரன்-தமிழரசி தம்பதியினர். இவர்களது மகன் குபேரன் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி தனது தாத்தாவுடன் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக பைக்கில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு படுகாயமடைந்த குபேரன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி சிகிச்சை பலனின்றி அவர் மூளைச்சாவு அடைந்தார். இதனை தொடர்ந்து குபேரனின் பெற்றோர் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். இதனை தொடர்ந்து குபேரனின் நுரையீரல், இரண்டு சிறுநீரகம், இதயம், கல்லீரல் ஆகியன அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டது. உயிரிழந்த குபேரனின் உடல் உறுப்பு தானத்தால் 5 நோயாளிகள் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

Categories

Tech |