மூன்று நாட்களில் ஒரு கிலோ உடல் எடையை குறைப்பது எப்படி என்பது பற்றிய தொகுப்பு
அதிக எடையுடன் இருப்பவர்கள் மூட்டுவலி, நீரிழிவு, நோய் ரத்த அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்படுவது எளிது. உடல் எடையை குறைப்பதற்கு உடற்பயிற்சி செய்வது சரியான உணவை எடுத்துக்கொள்வது என பல வழிமுறைகளை கடைபிடித்து இருந்தாலும் நமது அன்றாட வாழ்க்கையில் செய்யும் சில மாற்றங்கள் உடல் எடையை குறைப்பதற்கு உதவுகின்றது.
உடல் எடையை 3 நாட்களில் குறைக்க வழிமுறைகள்
- சரியான உணவு முறையை பின்பற்றுவது மட்டுமல்லாமல் தவறாமல் உடற்பயிற்சி செய்வது அவசியம்.
- தினமும் ஜிம்மிற்கு செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. வீட்டிலேயே நடைபயிற்சி, ஜாக்கிங் அல்லது படிக்கட்டு பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளலாம்.
- உடலில் இருக்கும் கொழுப்பை குறைக்க சூடான தண்ணீர் குடித்தால் போதுமானது. இது உடல் எடையை குறைக்க அடிப்படை தேவையாகும்.
- உணவில் சேர்க்கும் சர்க்கரையின் அளவை குறைப்பதால் உடல் எடையை குறைக்க முடியும். சர்க்கரைக்கு பதிலாக தேன் அல்லது பனை வெல்லம் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
- தினமும் மூன்று கப் கிரீன் டீ குடித்தால் உடலில் இருக்கும் கொழுப்புகள் வேகமாக கரையும்.
உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் உடற்பயிற்சி செய்வதுடன் உணவில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியது அவசியம். ஆரோக்கியம் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும். எண்ணெயில் செய்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும்.