Categories
சினிமா

நடிகை சஞ்சனா கல்ராணி… திருமணம் நடந்ததா? இல்லையா?… கிளம்பிய சந்தேகம்…!!!

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை சஞ்சனா கல்ராணி ஜானின் மனுவில் தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகை சஞ்சனா கல்ராணி போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் மதம் மாறி மருத்துவரான அஜிஸ் பாஷா என்பவரை திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதற்கு சஞ்சனா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனிடையே அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் ஜாமீன் மனுவில் தனது பெயரை அர்ச்சனா என்கின்ற சஞ்சனா கல்ராணி என்று குறிப்பிட்டுள்ள அவர் தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று கூறியுள்ளார். அதனால் அவருக்கு திருமணம் நடந்ததா? இல்லையா? என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.

 

Categories

Tech |