உத்திரபிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க காரணம் யோகி ஆதித்யநாத் அரசாங்கம் தான் என்று பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
உத்திரபிரதேசத்தில் இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந் நிலையில் அம்மாநிலத்தில் உள்ள கோண்டா நகரத்திற்கு அருகே இரவில் தூங்கிக்கொண்டிருந்த மூன்று சகோதரிகள் மீது திராவகம் வீசப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.அந்த கொடூர சம்பவத்தில் அக்காவுடன் உறங்கிக் கொண்டிருந்த அவரின் சகோதரிகளான இரண்டு சிறுமிகளும் படுகாயமடைந்துள்ளனர். உத்திரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகரித்து வருவதால், அம்மாநிலத்தை காங்கிரஸின் தலைவரான பிரியங்கா காந்தி கடுமையாக கண்டித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், “யோகி ஆதித்யநாத் அரசாங்கம், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை நியாயப்படுத்துவதும், அரசியல் நோக்கத்துடன் குற்றவாளிகளை பாதுகாப்பதுமே அம்மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க முக்கிய காரணம்”என்று அவர் கூறியுள்ளார்.