ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த பரபரப்பான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்போடு களமிறங்கிய சென்னை அணிக்கு தோனி பல்வேறு முடிவுகளை மாற்றி அமைத்தது வெற்றிக்கு வித்திட்டார். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்றிலுமே தோனி அதிக முடிவுகளை அடிக்கடி மாற்றி அமைத்துக் கொண்டு இருந்தார். அதன் பலனாகவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.
இந்த ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த வெற்றி ஒரு முக்கிய மைல் கல்லாக இருக்கின்றது. போட்டி முடிந்த பிறகு தோனியை ஹைதராபாத் அணியை சேர்ந்த இந்திய இளம் வீரர்கள் சந்தித்து பேசினர். அவர்களுக்கு மகேந்திர சிங் தோனி பல ஆலோசனைகளை வழங்கினார். இந்த போட்டோ மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் தோனி ரசிகர்கள் இந்த போட்டோவை வைத்து பல மீம்ஸ்களை உருவாக்கி பகிர்ந்து வருகின்றனர்.
Thala @msdhoni is intense on the field but off it, he always shares his knowledge and wisdom with the younger bunch.
😍 #Dream11IPL #SRHvCSK pic.twitter.com/9TJTw7WLNx
— IndianPremierLeague (@IPL) October 13, 2020