Categories
உலக செய்திகள்

இந்தியாவின் ஆரோக்ய சேது செயலி…150 மில்லியன் பேர் யூஸ் பன்றாங்க… உலக சுகாதார அமைப்பு… வெளியிட்ட தகவல்…!!!

இந்தியாவால் அறிமுகம் செய்யப்பட்ட ஆரோக்ய சேது செயலியை 150 மில்லியன் பேர் டவுன்லோட் செய்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் கூறியுள்ளார்.

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க வேண்டுமென்றால் பாதிக்கப்பட்ட அனைவரையும் தனிமைப்படுத்தி அவர்களிடம் இருந்து பொதுமக்களை பாதுகாப்பது மட்டுமே ஒரே வழியாக உள்ளது. அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களை ஒவ்வொரு நிமிடமும் கண்காணிப்பதற்கு ஒரு செயலி உருவாக்கப்பட்டது. அதனை ஸ்மார்ட் போனில் டவுன்லோட் செய்து விட்டால், நெட்வொர்க் மூலமாக அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை எளிதில் அடையாளம் காண முடியும்.

அதற்காக மத்திய அரசு ஆரோக்ய சேது என்ற செயலியை உருவாக்கியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும், விமானம் மற்றும் ரயில் பயணம் செய்பவர்கள் இந்த செயலியை கட்டாயம் டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இந்த நிலையில் அந்த ஆரோக்ய செயலியை உலகம் முழுவதிலும் 150 மில்லியன் பேர் டவுன்லோட் செய்து இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் டைரக்டர் ஜெனரல் டேட்ரோஸ் அதானோம் கூறியுள்ளார்.

 

Categories

Tech |