மேற்கு வங்காள மாநிலத்தில் இன்று மிகப்பெரிய அளவிலான வெடி சத்தம் கேட்டதால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உறைந்து போயினர்.
மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள பெலேகாட்டா என்ற பகுதியில் இன்று திடீரென பயங்கர வெடி சத்தம் கேட்டது. அதனால் அப்பகுதியில் உள்ள காந்திமாத் நண்பர்கள் கிளப்பின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதமடைந்தது.
திடீரென பயங்கர சத்தம் கேட்டதால் வெடித்தது குண்டா? அல்லது சக்தி வாய்ந்த பொருளா? என்று உடனடியாக தெரியவில்லை. பெரிய அளவிலான சத்தம் கேட்டதால் மக்கள் அனைவரும் அச்சத்தில் நடுங்கினர்.