Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

கொரோனா பரிசோதனை சிறப்பு முகாம் – சுற்றுலா பயணிகள் பங்கேற்பு…!!

புதுச்சேரியில் நடைபெற்ற கொரோனா பரிசோதனை சிறப்பு முகாமில் சுற்றுலா பயணிகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பரிசோதனை செய்து கொண்டனர்.

புதுச்சேரியில் கொரோனா தொற்று  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பும் 31 ஆயிரத்தை தாண்டி உள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 550 கடந்துள்ளது. கொரோனா தொற்றை கண்டறியும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் நேற்று கடற்கரை சாலையில் கொரோனா பரிசோதனை சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

இதில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பரிசோதனை மேற்கொண்டனர். ராபிட் டெஸ்ட்கிட் மூலம் நடத்தப்பட்ட பரிசோதனையில் முடிவு 20 நிமிடங்களில் பரிசோதனை செய்தவர்களுக்கு குறுந்தகவல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

Categories

Tech |