ஜாதியின் பெயரால் ஊராட்சி மன்ற தலைவர் அவமமதிக்கபட்டதற்கு நடிகர் சதீஷ் கண்டனம் தெரிவித்துள்ளர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அடுத்து இருக்கும் தெற்கு திட்டை கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ராஜேஸ்வரி. இவரை பட்டியல் இனத்தை சேர்ந்தவர், தாழ்த்தப்பட்டவர் என்று கூறி ஆலோசனை கூட்டத்தின் போது தரையில் அமர வைத்து அவமதித்னர் . இது தொடர்பாக வெளியான புகைப்படம் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இது குறித்து அரசியல் தலைவர்கள் மற்றும் திரை உலக பிரபலங்கள் என பலரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
அவ்வகையில் நடிகர் சதீஷ் டுவிட்டரில் இது குறித்த கருத்து ஒன்றை பதிவிட்டள்ளார். அதில், ”ஜாதியை காரணம் காட்டி ஒரு ஊராட்சி தலைவரையே நாற்காலி தராமல் தரையில் அமர வைத்த அவலம் கண்டிக்கத்தக்க கொடூர செயல். என்னால் இந்த சமூகத்தை மாற்ற முடியுமோ இல்லையோ நான் என் வாழ்வில் இந்த தவறை செய்ய மாட்டேன். தனி மனித ஒழுக்கம் ஒன்றே இதனை ஒழிக்க முடியும். அனைவரும் சமம்” எனபதிவிட்டுள்ளார்.