கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 லட்சத்து 81 ஆயிரத்தை தாண்டியது.
கொரோனா பாதிப்பு 3 கோடியே 77 லட்சத்தை கடந்துள்ளது. சீனாவின் ஊகன் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகின் இருநூற்றி பத்துக்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவி மனிதப் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 79 லட்சத்து 90 ஆயிரத்து தாண்டியுள்ளது. 2 லட்சத்து 19 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிர் இழந்து விட்டனர்.
இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் 71 லட்சத்து 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 184 பேர் உயிரிழந்துள்ளனர். மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 51 லட்சத்தை நெருங்கி உள்ளதோடு 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து விட்டனர்.
இதேபோல் ரஷியா, தென்னாப்பிரிக்கா, மெக்சிகோ, சிலி, பெரு, கொலம்பியா போன்ற உள்ளிட்ட பல்வேறு நாடுகளையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 லட்சத்தி 81 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனா பாதிப்பு 3 கோடியே 77 லட்சம் கடந்துள்ளது. உலக அளவில் இதுவரை 2 கோடியே 83 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர்.