தோனியின் 5 வயது மகளுக்கு பாலியல் ரீதியாக மிரட்டல் விடுத்து கருத்து பதிவிட்ட 12 ஆம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்
ஐபிஎல் விளையாட்டில் சிஎஸ்கே அணி தோல்வியற்றதை தொடர்ந்து தோனியின் ஐந்து வயது மகளுக்கு இன்ஸ்டாகிராமில் பாலியல் மிரட்டல் விடுத்து கமெண்ட் செய்யப்பட்டது. இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள கட்ச் மாவட்டத்தை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளான்.
தோனியின் மகளுக்கு பாலியல் ரீதியாக மிரட்டல் விடுத்து கருத்து வெளியிட்டது நான் தான் என அந்த மாணவன் ஒப்புக் கொண்டுள்ளதாக கட்ச் காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். ராஞ்சி காவல்துறையினரிடம் மாணவனை ஒப்படைக்க காத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.